| நடிப்பது | |
இந்தப் பகுதியில் நான் ஊமைக் காதல் என்ற பெயரில் என் முன்னால் காதலை கதையாக எழுதியிருந்தேன். அதை என் நண்பர்கள் எல்லோரும் படித்தார்கள். அதில் காதலிக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக அவளின் பெயர் மற்றும் சிலவற்றில் மாற்றங்களைச் செய்து யாரும் எளிதில் கண்டறியாத வண்ணம் கதையை மாற்றியமைத்திருந்தேன். அதை படித்துவிட்டு நண்பர்களில் சிலர் யார் அந்தப் பெண் என்று என்னிடம் வினவினார்கள். நான் சொல்ல மறுத்து வந்தேன். ஆனால், கதையைப் படித்த நண்பர்களுள் ஒருவன் கண்டறிந்துவிட்டிருந்தான். | |
அவன் அவளுக்கு நெருங்கிய தோழன். மிகவும் நல்லவன். அவளுக்கு திருமணம் ஆகிவிட்டிருந்த போதும் அவள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வருபவன். இன்னும் சொல்லப்போனால் அவன் அவள் குடும்பத்தில் ஒருவன். அவனை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அவனுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. ஒரு மகன் இருக்கிறான். தம்பதி சமேதராக அவளும், அவளின் கணவனும் அவன் வீட்டிற்கும் அடிக்கடி சென்றுவருபவர்கள் தான். இப்போது இருவரும் குடும்ப நண்பர்கள். அவன் எனக்கும் நல்ல நண்பன் தான். அவன் என் ஆர்க்குட்-சமூக வலைதளத்தில் கூட இப்போது இல்லை. படைப்பை பிரசுரித்துவிட்டு எல்லோருக்கும் அலைபேசியில் குறுந்தகவல் அனுப்புவது என் வழக்கம். அப்படி ஒரு குறுந்தகவல் அவனுக்கும் சென்றது. பார்த்திருக்கிறான். பார்த்ததும் படித்திருக்கிறான். படித்தவன் அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில நுணுக்கமான குறிப்புக்களை கருத்தில் எடுத்துக்கொண்டு யோசித்திருக்கிறான். கொஞ்ச நேரம் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தவனுக்கு இந்த ஆர்வம் இன்னும் அதிகரித்திருக்கிறது. யார் என்பதை கண்டறிவதில் கவனத்தைத்த திருப்பியிருக்கிறான். பிறகு யாராக இருபாள் என்று சொல்லப்பட்ட தகவல்களோடு அவளை ஒப்பிட்டு கற்பனை செய்து பார்த்திருக்கிறான். ஒப்பீடுகளில் சில துப்புகள் ஒத்துப்போய்விடவே உடனே என்னை அலைபேசி வழியே தொடர்புகொண்டான். நலம் விசாரித்தவுடன் அவன் கேட்ட கேள்வி - "அவளா இவள்?". கதையில் அவளைப்பற்றி நிஜத்தைச் சொன்னவன் நிஜத்தில் அவளைப் பற்றி கதையாய்ச் சொன்னேன். "அடே நண்பா, கதையில் நான் எத்தனை மறைத்திருந்தாலும் ஒரு சில விஷயங்களில் பொய் கூற முடியாது. கதையில் அவள் எழிலரசி என்று குறிப்பிட்டிருந்தேன். இவள் அழகி என்று குறிப்பிடும் அளவிற்கு ஒன்றும் அழகில் சிறந்தவள் இல்லை. கதையில் அவள் தோழிகளிடம் கூட அதிகம் பேசமாட்டாள் என்று குறிப்பிட்டிருந்தேன். இவளோ தன் ஆண் தோழர்களுடன் கூட தன்னை மறந்து சிரித்துப் பேசியதை நானே கல்லூரியில் பல முறை கண்டிருக்கின்றேன். இதற்கெல்லாம் மேல் அவள் தெய்வீகமானவள் என்று சொல்லியிருந்தேன். இவளை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் எள்ளளவும் தெய்வீகத் தன்மை இருப்பதாகத் தோன்றவே இல்லை. இப்படி சொல்லப்பட்ட எந்தக் குறிப்பிற்கு ஒப்பிட்டுப் பார்த்தாலும், சற்றும் ஒத்தே போகாத ஒருத்தியைச் சுட்டிக்காட்டி, எப்படிக் கேட்கிறாய் "இவளா அவள்?" என்று." அவனோ நான் சொன்னது எல்லாவற்றையும் மறுத்தான். நானோ நாவில் நரம்பில்லாதவனாய் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவனிடம் வாதாடிக்கொண்டிருந்தேன். எவ்வளவு சொல்லியும் இறுதிவரை அவன் நம்பவே இல்லை. நானும் மறுப்பதை நிறுத்தவே இல்லை. வெறுப்பின் உச்சிக்கே சென்றவன், இறுதியில் இணைப்பைத் துண்டித்துவிட்டான். துண்டித்ததும் துயரத்தில் நான் அழுகையை அடக்கிக்கொண்ட விஷயம், பாவம் அவனுக்குத் தெரியாது. -வசந்த் குமார் அருணாசலம் |
கதைக்களம் | | நடிப்பது | |||
![]() |
நபர் | அடியேன் - நான் (எ) வசந்த் குமார்.அ. | ||
கதாபாத்திரம் | வழக்கம்போல வறுமைக்கு அஞ்சாத அசாதாரணமான படைப்பாளி | |||
பணி | தொழிற்திறமிருந்தும் முதலீடின்றித் தோற்றவன். வறுமையைப் போக்க வடிவமைப்பாளனாய் திகழ்கிறேன். | |||
காட்சி | கனற்பொறிக் கனவுகளோடு கணிப்பொறி மனிதர்கள் நடுவே... | |||
இடம் | இழப்பின் வலிகள் மறத்துப்போன இருப்புக்கான யுத்தகளம்... | |||
கொள்கை | தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை. | |||
இன்னும். . . | vasanthkumarmdu@gmail.com | Orkut, facebook-ல் நண்பராகலாம் | +919791804048 |
Showing posts with label நடிப்பது. Show all posts
Showing posts with label நடிப்பது. Show all posts
நிஜமல்ல கதை
தோற்றப் பிழை
| நடிப்பது | |
எங்கள் வீட்டுக்கு தினமும் தயிர் விற்றுக்கொண்டு ஒரு அக்கா வருவார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் தயிர் சட்டியுடன் நின்று கொண்டு "அம்மா. தயிர் வேண்டுமா?" என்று கேட்டுக் கொண்டு இருப்பார். அந்த அக்காள் வரும்போதெல்லாம் மனதில் ஒரு வலி பிறக்கும். அவருக்கும் அவரின் வியாபாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லை. இவர் ஏன் தயிர் விற்க வேண்டும் என்று தான் யோசிப்பேன். அப்போது தான் எனக்கு என் காதலி ஞாபகத்திற்கு வந்தாள். சித்திரம், தேவதை, எழிலரசி, கவிதை, காவியம் என்றெல்லாம் வர்ணித்துவிட்டு, உன்னை மகாராணி போல வாழவைக்கிறேன் என்று வாக்குறுதி அளித்து மணம் முடிக்கின்றோம். சின்ன ஈ, எறும்பு அண்டாமல் ஏன் பூ விழுந்தால் கூட நம் மனது தாங்காது என்று அவளிடம் சொல்கின்றோம். தம் மீது வைத்த அன்பை நம்பித் தான் அவள் நமிடம் அவளை ஒப்படைக்கின்றாள். தேன் போன்ற குரலும், தேவதை போன்ற அழகும் வைத்துக்கொண்டு தெருத் தெருவாக, வீடு வீடாக "அம்மா. தயிர் வேண்டுமா" என்று கேட்டுக்கொண்டிருந்தால் நன்றாக வாழ்ந்த ஒருத்தி விதிவசத்தால் வீதிக்கு வந்துவிட்டதாகத் தானே தோன்றும். அந்த அக்காளின் கணவன் அவளை மதிக்காமல் கைவிட்டுவிட்டானோ என்றும், இவளை எப்படி கைவிட ஒருவனுக்கு மனம் வருகின்றது என்றும் தான் மனதில் கேள்வி எழுகின்றது. | |
சாமியே வீட்டுக்கு முன் வந்து தயிர் வியாபாரம் செய்வது மாதிரி இருக்கின்றது. பல நேரங்களில் வேண்டாம் என்று சொல்ல வாயே வராது. தேவை இல்லாவிட்டாலும் அதை அப்படியே சொல்ல முடியாது. ஏன், தயிர் சட்டியை வைத்துக் கொண்டு நின்றுகொண்டிருக்கும் அவளைப் பார்ப்பதற்கே மனம் சங்கடமாக இருக்கும். இதெல்லாம் அவள் மனதிற்கு புரியாமலா இருக்கும். நாம் நம் தோற்றத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒன்றை செய்துகொண்டு இருக்கின்றோம் என்று ஏன் அவள் யோசிக்காமலேயே இருக்கின்றாள். ஒரு வேலை வீட்டின் சூழல் அவளை இப்படி ஆக்கி விட்டு இருக்கின்றதா. எப்படி பார்த்தாலும் பெண்கள் கௌரவமாக வாழ நாட்டில் பல வழிகள் உள்ளன. பிறகு, ஏன் அவள் தயிர் வியாபாரத்தை தேர்ந்தெடுத்தாள். இதை செய்யத் துணிந்த போது அவள் யோசிக்கவே இல்லையா. என் பெரியம்மா ஒருவர் கேரளாவில் கிலோ கணக்கில் மூடையாக சாக்கிலேட் வாங்கி அதை வீட்டில் வைத்து சாக்கிலேட் பேப்பரில் சுருட்டி மூடைக்கு இவ்வளவு என்று பணம் சம்பாதிக்கிறார். என் அத்தை ஒருவர் கூடை பின்னும் வயரால் பிளாஸ்டிக் பூமாலை கட்டி அதை கொடுத்து வாரம் இவ்வளவு என்று சம்பாத்தியம் செய்கிறார். என் தங்கை ஒருவள் பாசி கோர்த்து பிளாஸ்டிக் கம்பெனிக்கு கொடுத்து காசு பார்க்கிறாள். என் தோழி ஒருத்தி தெருத் தெருவாக வீடு வீடாக போகிறாள். ஆனால் அவளுக்கான கௌரவம் இருக்கும். காரணம் அவள் தொழில் ஆர். டி. பிடிப்பது. போஸ்ட் ஆபீசில் ஆர்.டி. தொகையை வசூல் செய்து மாதா மாதம் கட்டி விடுவார். அதற்க்கு ஒரு கமிசன் அவருக்குக் கிடைக்கும். ஆர். டி. தொகை கொடுக்காவிட்டால் அது கொடுக்காதவருக்குத் தான் நஷ்ட்டம். அதனால் அவள் வீடு வீடாகச் சென்று கத்திக் கொண்டு இருக்கத் தேவை இல்லை. அவள் சென்றாலே வீட்டில் உள்ளவர்கள் மரியாதையுடன் தான் நடத்துவார்கள். இதனால் அவள் கௌரவத்திற்கு எந்த இழுக்கும் இருக்காது. ஆனால் இவர்கள் எல்லாம் தன் வீட்டு நிலைக்காகத் தான் கஷ்ட்டப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்களில் எவரும் தயிர் கார அக்காளின் அழகுக்கு இணையானவர்களே இல்லை. தயிர் கார அக்காள் இவர்களை எல்லாம் விட அவ்வளவு அழகு. இவர்கள் தெருத்தெருவாக தயிர் விற்றாலும் அது தவறாகத் தெரியாது. ஆனால், தயிர்க்கார அக்காள் அப்படி இல்லை. சில பெண்கள் "வீட்டுக்குள்ளேயே பெண்கள் முடக்கப் படுகிறார்கள்", "பெண்களுக்குச் சுதந்திரம்", "பெண்ணடிமை", "பெண்கொடுமை" என்றெல்லாம் கூறி சம்பாதிக்க வீட்டை விட்டு படிதாண்டி சென்றுவிடுகிறார்கள். ஆனால் தோற்றத்திற்கு ஒவ்வாத தொழிலை செய்கிற போது அவர்களால் அவர்களுக்கும், அவர்கள் சார்ந்த குடும்பத்தார்க்கும், அவர்களின் கணவன் மற்றும் தகப்பன் மார்களுக்கும் தான் அவப் பெயர். ஒன்று மட்டும் புரிந்தது. காலம் காலமாக பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்வது அவர்களை கொடுமை படுத்துவதற்க்காக அல்ல. அவர்களின் மீது நாம் வைத்திருக்கும் அளவற்ற்ற மதிப்பினால். வீட்டில் இருக்கும் வைரத்தை வீடு வீடாகச் சென்று "நான் வைரம் வைத்திருக்கிறேன் பாருங்கள்" என்று யாரேனும் சொல்லிக்கொண்டு இருப்பார்களா. பெண்கள் வீடு வீடாகச் செல்வது இத்தகைய எண்ணங்களைத் தான் உருவாக்குகின்றது. வைரத்தை வைரமே காட்டிக் கொள்வதைப் போல. அதை பார்க்கும் ஒவ்வொரு ஆணின் மனதும் தான் சிரமத்திற்கு உள்ளகுகின்றது. ஒரு உறுதி, நான் மணம் முடிக்கவிருப்பவளை எந்த நிலையிலும் இப்படி ஒரு நிலைக்கு ஆட்படுத்தவே மாட்டேன். ஏனென்றால் அவள் எனக்கே காதலி. மற்றவர்களுக்கோ தெய்வம். தெய்வத்தின் பாதம் தெருப் பறற்களால் காயப் படுதல் தவறு. அவள் என்றும் என் வீட்டில் மகிழ்ச்சியாக மனம் நிறைந்த அருள் புரியட்டும். கண்டிப்பாக அவள் தன் மனதிற்குப் பிடித்ததைச் செய்வாள். வீட்டைவிட்டு வெளி வேலைக்கும் கூட செல்வதற்கு அவளுக்குச் சுதந்திரம் இருக்கும். ஆனால் எங்களுக்கு மரியாதை குறைவை ஏற்ப்படுத்தும் எதையும் செய்ய மாட்டாள். ஏனென்றால் அவள் என் ஆருயிர்க் காதலி. எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கு. எங்களின் மாசற்ற சொத்து. என்ன கொடுமை என்றால் இப்போது எங்கள் வீட்டில் எந்தப் பெண்ணும் இல்லை. எங்கள் வீட்டு கிழவியைத் தவிர. அவளும் எங்கள் குடும்பத்திற்கு இட்டிலி சுட்டு உழைத்துப் பாடுபட்டவள் தான். ஆனால் எங்களின் குடும்பத்திற்கு இன்றும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றாள். குடும்பத்தில் இனி வரும் எந்தப் பிறப்பும் அவளை நன்றி மறவாமல் நினைத்துப் பார்க்கும். வாழும் தெய்வம் அந்தக் கிழவி. -வசந்த் குமார் அருணாசலம் |
Subscribe to:
Posts (Atom)